ஷவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை துரதிர்ஷ்டவசமானது : எதிர்க் கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2020

ஷவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை துரதிர்ஷ்டவசமானது : எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்ற தளபதிகளில் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைரின் ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.

நாடு என்ற ரீதியில் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் எதிர்க் கட்சித் தலைவரின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த செயற்பாட்டுக்கு இலங்கை கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment