மத்திய மாகாணத்தில் 5000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை - ஆளுநர் லலித் யூ கமகே - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2020

மத்திய மாகாணத்தில் 5000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை - ஆளுநர் லலித் யூ கமகே

மத்திய மாகாணத்தில் 5000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிகழுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்தார்.

கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரியில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய மாகாணத்தில் சுமார் 32 ஆயிரம் ஆசிரியர்களின் சேவை தேவைப்படுகிறது. ஆனால் தற்போது சுமார் 27 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே சேவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக மாத்தளை மாவட்டத்திலுள்ள வில்கமுவ, லக்கலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வலப்பனை போன்ற இடங்களிலே அதிகளவு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, மத்திய மாகாணத்திலுள்ள நகர பிரதேசப் பாடசாலைகளில் நீண்ட காலம் சேவையாற்றியவர்களை வெளிப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இம்மாகாணத்தில் ஆசிரியர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்குப் பெரிதும்பாடுபட்டு உழைப்பதாகவும் அவ்வாறானவர்களைத் தாம் பெரிதும் பாராட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(அக்குறணை நிருபர்)

No comments:

Post a Comment