45 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் கண்டியைச் சேர்ந்த கணவன், மனைவி என்பதோடு, மற்றைய பெண் மாத்தளையைச் சேர்ந்தவர். மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாங்கொடையைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment