சிங்கமலை காட்டுப்பகுதியில் இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினை கட்டுப்படுத்த இன்று (13) மாலை 4.20 மணியளவில் வான் படைக்கு சொந்தமான பெல் 212 வகை உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பொலிஸ் பரிவுக்குட்பட்ட ஹட்டன் பிரதேசத்தின் பிரதான குடிநீர் பிறப்பிடமான ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்ட தீ காரணமாக வனப்பாதுகாப்பு பகுதியில் பல ஏக்கர் வன பிரதேசம் எரிந்து நாசமாகின.
இதனை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு படை பரிவு, பொலிஸார் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் வரட்சியான காலநிலை காரணமாக அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் வன பாதுகாப்பு திணைக்களம் வான் படையின் உதவியினை கேட்டுக்கொண்டதற்கமைய, வான் படையினர் காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து நீரினை எடுத்து வந்து தீ ஏற்பட்ட பகுதியில் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த போதிலும், தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள், வற்றிப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.
இந்த தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன வலங்குகள் உயிரினங்கள் உட்பட மருந்து மூலிகைகள் ஆகியன அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மலையகப்பகுதியில் வரட்சியான காலநிலை நிலவி வருவதோடு, காடுகளில் தீ வைக்கும் சமபவங்களும் அதிகரித்துள்ளன.
எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலையகத்தில் காணப்படும் காட்டு வளம் தொடர்ந்தும் அழிக்கப்படுவதனால, காட்டுப்பகுதியில் வாழும் கொடிய உயிரினங்கள, மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுகின்றன.
எனவே இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் செயப்படுமாறும் காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாரும், சூழல் பாதுகாப்பாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(ஹட்டன் கே.சந்தரலிங்கம்)
No comments:
Post a Comment