வணிக கப்பற் செயலக அலுவலகத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை - Online முறையில் செயற்படுத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிகாரிகளுக்கு அறிவுரை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

வணிக கப்பற் செயலக அலுவலகத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை - Online முறையில் செயற்படுத்த அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிகாரிகளுக்கு அறிவுரை

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சிற்கு சொந்தமான வணிக கப்பற் செயலக அலுவலகம் தொடர்பில் பல்வேறுப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமையால் அதனுடன் இணைந்து செயற்படும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளிற்கு உள்ளாகாத வகையில் அனைத்து செயற்பாடுகளையும் Online முறையில் செயற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நேற்று (20) வணிக கப்பற் செயலக அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பொழுதே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். 

இந்நிறுவனத்தினால் செயற்படுத்தப்படும் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கு புதிய செயற்றிட்டமொன்றை அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
'இந்நிறுவனம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கு பல குறைபாடுகள் நிலவுகின்றன. இந்நிறுவனத்திற்கு வருகை தரும் சேவை பெறுநர்கள் தமக்கான சேவைகளை பெற்றுக் கொள்வதில் காலதாமதம் நிலவுகின்றது. 

எனவே நானும் செயலாளரும் இவ்விடத்திற்கு வருகை தந்து இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தோம். இங்குபல குறைபாடுகள் காணப்படுவதை நாம் அவதானித்தோம். இவற்றை திருத்தியமைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலேசனை வழங்கியுள்ளோம். 

பணம் அறவிடுதல் செயற்பாட்டினை Online முறைக்கும், பணத்தை வங்கிக்குச் சென்று வைப்பிலிடுவதற்கும் ஏற்ற வகையில் மாற்றியமைக்குமாரும், மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துமாரும் கூறினோம். 
இம்மாற்றங்களை செய்தால் பெருமளவிலான பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளலாம். ஒரு வார காலப்பகுதிக்குள் இம்மாற்றங்களை செய்ய வேண்டுமென நாம் கூறியுள்ளோம். 

அதுவே அதிமேதகு ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். இவ் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் பொருட்டு நாம் இவ்விடத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளோமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

இலங்கை வணிக கப்பற் செயலக நிருவாகத்திற்கு பொறுப்பாக வணிக கப்பற் செயலக அலுவலகம் செயற்படுகின்றது. சமுத்திரவியல் கண்காணிப்பு செயற்பாடுகள் உள்ளடங்கலான அனைத்து செயற்பாடுகளையும் இச்செயலகம் முன்னெடுக்கின்றது. 
அதன் கீழ் கடலில் பயணிக்கின்ற அனைத்து உயிர்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு, சமுத்திரவியல் கற்றல் செயற்பாடுகள், பயிற்சிகள், பயிற்சிகளின் பின்னரான சான்றிதழ்கள் வழங்குதல், இலங்கை கொடியின் கீழ் கப்பல்களை பதிவு செய்தல், கப்பல் முகவர்களுக்கு, கொள்கலன்கள் மத்திய நிலைய செயற்பாட்டாளர்களிற்கு, முனைய செயற்பாட்டாளர்களிற்கு, கப்பற் பொருட்கள் கையால்பவர்களுக்கு, வாப்பு கையால்பவர்களுக்கு, படகு இயக்குனர் அல்லாத பொது போக்குவரத்து சாரதிகளுக்கு தேவையான வருடாந்த அனுமதி பத்திரங்களை வழங்குதல் மற்றும் தேசிய, சர்வதேச சமுத்திரவியல் சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படும் பொறுப்பு இவர்களைச் சாரும். 

இச்செயற்பாடுகளை வினைத்திறனான முறையில் முன்னெடுக்கும் பொருட்டு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரான எம்.எம்.பி.கே.மாயதுன்ன ஆகியோர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment