பிரதமர் மகிந்த உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா செல்லவுள்ளார் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2020

பிரதமர் மகிந்த உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா செல்லவுள்ளார்

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பயணமாக எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். 

இவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து திருப்பதி, வாராணசி, சார்நாத், புத்தகயா ஆகியவற்றுக்கும் செல்லவுள்ளார். 

இதனை இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று மாலை அறிவித்தார். 

இது தொடர்பாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியா வரும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 8ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்பின் இலங்கை பிரதமர் வாராணசி, சார்நாத், புத்தகயா மற்றும் திருப்பதிக்கும் செல்லவுள்ளார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

No comments:

Post a Comment