நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.
இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவன தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம், கொழும்பு குற்றப் பிரிவினர் நேற்று (19) பிற்பகல் சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment