(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பைச் சேர்ந்த தேசமானிய உருத்திரமூர்த்தி யுவநாதன் அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட குளோபல் பீஸ் யுனிவர்சிட்டியினால் (Global Peace University) கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 22ம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போதே இவர் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, டுபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 26 பேருக்கு விஞ்ஞானம், வர்த்தகம், தொழிநுட்பம், மனித உரிமைகள் ஆகிய துறைகளில் கலாநிதிப்பட்டம் வழங்கப்பட்டது.
இதில் விஞ்ஞானப் பிரிவில் விசேடமாக, மீன்பிடி அபிவிருத்தி முகாமைத்துவத்தில் (Doctor of Science Specialized in Fisheries Development and Managment) கலாநிதிப் பட்டம் பெற்ற திரு. யுவநாதன் சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் கடல் சார் தொழில் நுட்ப டிப்ளோமாவையும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் நீர்வள முகாமைத்துவ டிப்ளோமாவையும் பூர்த்தி செய்ததுடன் இத்துறைசார் ஆய்வாளரும் பகுதி நேர விரிவுரையாளருமாவார்.
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட உதவிப் பணிப்பாளரான இவர் மட்டக்களப்பு நாவலடியைச் சேர்ந்த உருத்திரமூர்த்தி, சிவமணியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார் அத்தோடு இவர் மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment