கொரோனா வைரஸ் : உலக நாடுகளுக்கு அவசர காலநிலை பிரகடனம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2020

கொரோனா வைரஸ் : உலக நாடுகளுக்கு அவசர காலநிலை பிரகடனம்!

சீனா மாத்திரமின்றி ஏனைய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு அவசர கால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213ஆக உயர்வடைந்துள்ளதோடு, இந்நோய் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது. 

சீனாவின் வூஹான் மாகாணத்திலேயே கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவத் தொடங்கியது.

23 நாடுகளில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், அந்நாடுகளில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) விசேட கூட்டத்திலேயே உலக நாடுகளுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்தது. 

எனினும் WHO சர்வதேச பயணங்கள் அல்லது வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்து சிறப்பு பரிந்துரைகளை எதையும் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment