வரி குறைப்பின் சலுகை அடுத்த மாதம் முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

வரி குறைப்பின் சலுகை அடுத்த மாதம் முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் - அமைச்சர் பந்துல

வரி குறைப்பின் சலுகை அடுத்த மாதம் முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பில் தொலைபேசி கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் மேலும் கூறுகையில், வரிக்குறைப்பின் பயன் மக்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. 

தொலைபேசி பாவனையாளர்களுக்கும் குறைக்கப்பட்ட வரிகளின் பயன் சென்றடையவில்லை. அடுத்த மாதம் முதல் பாவனையாளர்களுக்கு இதன் பயன் கிடைக்கும்.

கடந்த வாரமே நிறுவன தலைவர்களை நியமிக்கும் பணி நிறைவடைந்தது. எனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களினூடாக வழங்கப்படும் சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஏனைய அமைச்சர்களும் தமக்குக் கீழுள்ள நிறுவனங்களினூடாக வழங்கப்பட வேண்டிய சலுகைகளை வழங்க ஆவன செய்வர் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment