கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை சீனாவில் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 213 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா இன்றைய தினம் உத்தியோகபூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக 23 நாடுகளைச் சேர்ந்த 9,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், அந்நாடுகளில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
1. சீனா : பாதிப்பு - 10,000 பேர், உயிரிழப்பு - 213 பேர்
2. தாய்லாந்து : பாதிப்பு - 14 பேர்
3. ஜப்பான் : பாதிப்பு - 14 பேர்
4. சிங்கப்பூர் : பாதிப்பு - 13 பேர்
5. ஹொங்கொங் : பாதிப்பு - 12 பேர்
6. தாய்வான் : பாதிப்பு - 09 பேர்
7. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 09 பேர்
8. மலேசியா : பாதிப்பு - 08 பேர்
9. மாக்கோ : பாதிப்பு - 07 பேர்
10. அமெரிக்கா : பாதிப்பு - 06 பேர்
11. தென்கொரியா : பாதிப்பு - 06 பேர்
12. பிரான்ஸ் : பாதிப்பு - 06 பேர்
13. ஜேர்மன் : பாதிப்பு - 05 பேர்
14. வியட்நாம் : பாதிப்பு - 05 பேர்
15. டுபாய் : பாதிப்பு - 04 பேர்
16. கனடா : பாதிப்பு - 03 பேர் பாதிப்பு
17. இத்தாலி : பாதிப்பு - 02 பேர் பாதிப்பு
18. நேபாள் : பாதிப்பு - ஒருவர்
19. கம்போடியா : பாதிப்பு - ஒருவர்
20. பின்லாந்து : பாதிப்பு - ஒருவர்
21. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - ஒருவர்
22. இந்தியா : பாதிப்பு - ஒருவர்
23. இலங்கை : பாதிப்பு - ஒருவர்
நேற்றைய தினம் மொத்தமாக 21 நாடுகளைச் சேர்ந்த 7184 பேர் கொரானாவின் தாக்கத்துக்குள்ளாகியிருந்த நிலையில், சீனாவில் உயிரிப்பானது 170 ஆக காணப்பட்டது. எனினும் இன்றைய தினம் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் சீனாவில் 213 பேர் ஆக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment