மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவு வழங்கியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட வேண்டுமென அரசிசயலமைப்பு சபை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கிஹான் பிலபிடியவை கைது செய்வதற்கு நீதிமன்றில் பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சட்டமா அதிபர் கடந்த தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பிலேயே சட்டமா அதிபர் குற்றப் புலணாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment