இந்தோ பசுவிக்கில் இலங்கையின் அமைவிடம் மூலோபாய ரீதியில் எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கான தனது சமீபத்திய விஜயம் குறித்து நியுயோர்க்கில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான முதன்மை பிரதி உதவி செயலாளர் அலைஸ் வெல் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தனது சமீபத்தைய விஜயத்தின் போது ஆக்கபூர்வமான சந்திப்புகள் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் நல்லிணக்கம் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை முன்னெடுக்கும் இலங்கையுடன் தொடர்ந்தும் உறவுகளை பேணுவது குறித்து அமெரிக்கா கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடிதத்தினை கையளித்தேன் என அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தான் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாக விளங்க விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளதை நாங்கள் வரவேற்றுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தோ பசுவிக்கில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அலைஸ்வெல்ஸ் இந்து சமுத்திரத்தில் அதிகளவு கேந்திர முக்கியத்துவம் நாடு இலங்கை எனவும் தெரிவித்துள்ளார்.
வன்முறை மிகுந்த தீவிரவாதம், கடற்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது, போதைப் பொருள் கடத்தலை தடுப்பது, சுதந்திரமான வெளிப்படையான ஆசிய பசுவிக்கினை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வர்த்தகம் முதலீட்டை ஊக்குவிப்பது போன்ற பகிரப்பட்ட பொதுவான நலன்கள் இரு நாடுகளுக்கும் உள்ளன எனவும் அலைஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் எங்களின் இணைந்த நடவடிக்கையின் சிறந்தர தரம் என்பது பொதுவான விழுமியங்களை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள வெற்றியிலேயே தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அலைஸ் வெல்ஸ் இலங்கையின் போர்க்காயங்களை ஆற்றும் முக்கியமான விடயமும் இதிலொன்று என தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment