(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் நாடு திரும்பியவுடன் பொதுத் தேர்தலை வெற்றி கொள்வதற்கான திட்டமிடல்கள் அனைத்தும் முழுமையாக செயற்படுத்தப்படும். பங்காளி கட்சிகளுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடும் போது எழும் சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் மாத்திரமே ஆராய்கின்றோம் என மின் சக்தி வலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மொட்டு சின்னம் அதிஷடமான சின்னம் அரசியல் அதிகாரத்தை இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரமே தீர்மானிக்கும் என்ற பாரம்பரிய கருத்தினை முழுமையாக மாற்றியமைத்துள்ளோம்.
இன்று இலங்கையின் அரசியலை தலைமைத்துவத்தினை தீர்மானிக்கும் பிரதான கட்சியாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எழுச்சிப் பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளினதும், சிவில் அமைப்புக்களின் ஆதரவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் பெற்றன.
எந்நிலையிலும் அடிப்படைவாதிகள் மற்றும் மக்களினால் வெறுக்கப்பட்ட தரப்பினருடன் கூட்டணிமைக்கமாட்டோம் என்று மக்கள் மத்தியில் குறிப்பிட்டோம். அதற்கமையே இன்றும் செயற்படுகின்றோம்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற கூட்டணியின் ஊடாகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டோம். ஜனாதிபதித் தேர்லில் பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட ஆலோசனை மறுக்கப்பட்டது மொட்டு சின்னத்திலே போட்டியிட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் குறிப்பிட்ட கருத்திற்கு மதிப்பளிக்கப்பட்டது.
கூட்டணியில் பெரும்பான்மை வகிக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். அதற்கமைய மொட்டு சின்னத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமாகும். மக்களை மையப்படுத்திய தேர்தல் கொள்கையாக வெளியிடப்படும்.
கமசதர பிலிசர திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரணடு பெரும்பான்மையுடனான ஆதரவினை பெற்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment