திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதனால் மக்கள் டெங்கு நோய் தொடர்பில் விழிப்புடன் செயற்படுவதோடு டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள பொது இடங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று திருகோணமலையில் (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் காரணமாக சில இறப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் நோய்த் தாக்கத்தின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் வைத்தியர்களும் தாதிமார்களும் வைத்தியசாலையில் நிலவுகின்ற நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறைக்கு மத்தியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
அத்துடன் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக அதனுடன் சார்ந்த அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றபோதும் பொதுமக்களின் ஒத்துழைப்பு முழமையாக கிடைக்கின்ற பட்சத்திலேயே அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.
எனவே பொதுமக்கள் தங்களை சூழவுள்ள பகுதிகளை துப்பரவாக பேணுவதோடு டெங்கு நுளம்பு பெருகும் அபாயமுள்ள இடங்கள் தொடர்பில் பிரதேச சபைக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment