அரச அலுவலகங்களுக்கு சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் பொதுமக்கள் சேவைத் திருப்தியுடன் செல்ல வேண்டும் - பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

அரச அலுவலகங்களுக்கு சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் பொதுமக்கள் சேவைத் திருப்தியுடன் செல்ல வேண்டும் - பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

அரச அலுவலகங்களுக்கு சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் பொதுமக்கள் சேவைத் திருப்தியுடன் செல்ல வேண்டும். அதற்கு அரச உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டுமென ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திரருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.

2020ம் வருடத்தின் முதல் நாளை முன்னிட்டு பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச செயலக ஊழியர்களின் “அரச உறுதி மொழி” செய்யும் நிகழ்வின் பின்னர் உரையாற்றுகையிலயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பொதுமக்கள் தங்களது தேவைகள் நிமித்தம் அரச நிறுவனங்களுக்கு வருகை தந்து மீண்டும் செல்லும் போது அவ்வலுவலகத்தில் சேவைத்திருப்தியாக இடம்பெற்ற சந்தோசத்தில் செல்வதற்கு அரச ஊழியர்கள் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

எமது அலுவலகத்திற்கு சேவைகளைப் பெறுவதற்கு வருகை தரும் பொது மகன் ஒருவருக்கு அவர் நாடி வந்த சேவையை வழங்குவதற்கு எனக்குத்தெரியாது. நான் செய்யும் வேலையில்லையென்று தெரிவிக்காமல், அவர்களது தேவைகளைக்கேட்டு நமது அலுவலகத்தினால் நடைபெறக்கூடிய தேவையாக இருந்தால், உரிய அதிகாரிகளிடம் அழைத்துச்சென்று அதனை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
மற்றவர்களின் குறைகளைக் கூறிக்கொண்டிருக்காமல் நாம் நேர்மையாக கடமைகளைச் செய்கிறோம் எமக்கு வழங்கப்பட்ட கடமைகளை செவ்வனே செய்கிறேன் என்று ஒவ்வொருவரும் நினைத்து செயற்படுவோமாக இருந்தால், அலுவலகங்கள் அனைத்தும் சிறந்து விழங்குமென்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், நிருவாக உத்தியோகத்தர் அப்துல் ஹமீட் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

புது வருடத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு இனிப்புப்பண்டங்கள் வழங்கப்பட்டதுடன், ஊழியர்கள் அனைவருக்கும் குறிப்பு புத்தகமும் பேனைகளும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment