சீனாவின் வுஹானிலுள்ள இலங்கையர்களை அழைத்து வந்தது விஷேட விமானம்! - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

சீனாவின் வுஹானிலுள்ள இலங்கையர்களை அழைத்து வந்தது விஷேட விமானம்!

சீனாவின் வுஹான் நகரிலிருந்து இலங்கை மாணவர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைளயும் ஏற்றிக்கொண்டு பயணித்த விசேட விமானம் இன்று (01) காலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 1422 எனும் விசேட விமானம் இன்று காலை 07.25 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இவ்வாறு வருகை தந்துள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று அவதானிக்க தியத்தலாவை இராணுவ வைத்தியசாலைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 1422 எனும் விமானம் மூலமே வுஹான் நகரிலிருந்து குறித்த மாணவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அத்தோடு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய மேலைத்தேய மற்றும் சுதேச சிகிச்சை முறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி கிடைத்த நிலையில் வுஹான் நகரிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்திருந்த விமானம் நேற்று சீனா நோக்கி புறப்பட்டது.

கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற இடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியிலிருந்து யாரையும் வெளியேற்ற சீன அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கவில்லை. 

இந்நிலையில் வுஹானில் கல்வி கற்கும் 33 இலங்கை மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்றுமாறு பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்தி வந்த நிலையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

அதனால் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் வுஹான் நகரில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸை விமானத்தை தரையிறக்குவதற்கும் அனுமதியை பெற்றது. 

இந்நிலையில், ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 1422 எனும் விமானமே நேற்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

அதன்படி, சீனாவில் இருந்து இதுவரை 604 இலங்கையர்கள் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் தெரிவித்தார்.

மேலும் 204 மாணவர்கள் சீனாவில் தங்கியுள்ள நிலையில், அவர்களை எதிர்வரும் தினங்களில் இலங்கைக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment