வீழ்ச்சியடைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்கும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

வீழ்ச்சியடைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்கும்

நாட்டின் பொருளாதாரம் கடந்த நான்கரை வருடங்களில் 15 வருட பின்னடைவைக் கண்டுள்ளதாகவும் இதை விரைவாகக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகுமென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

கொழும்பு பங்குச் சந்தை தரகர்கள், சங்கப் பிரதிநிதிகள் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தனர். இதன் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு மேலும் தெரிவித்த அவர் வீழ்ச்சியடைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்கும். 

கடந்த நாலரை வருடங்களாக கொழும்பு பங்குச் சந்தை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதனால் பங்குச் சந்தையின் தரகர் நிறுவனங்கள் பல மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அங்கு பணிபுரிந்த பெருமளவானோர் தமது தொழிலை இழந்துள்ளனர். எக்காரணத்தைக் கொண்டும் அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். 

பல்வேறு காரணங்களுக்காக தாமதப்படுத்தப்பட்டுள்ள தரகர்கள், தொடர்பான சட்டமூலம் தொடர்பில் இங்கு பங்குச்சந்தை தரகர் சங்கத்தினர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், கொழும்பு பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்களை விரைவாக அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாட்டுக்குள் அழைப்பது குறித்தும் பிரதிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கென ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை கொழும்பு பங்குச் சந்தை முதலீட்டுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் மேற்படி தரகர்கள் சங்கத்தினர் பிரதமரிடம் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment