மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான உரிய ஆவணங்களை நல்லாட்சி அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கவில்லை. பிணைமுறி மோசடி குறித்து எவ்விதமான உரிய நடவடிக்கைகளும் இதுவரை காலமும் முன்னெடுக்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல்.பீறிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனுவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை பிரஜையல்லாத ஒருவரை நாடு கடத்தல் என்பது சாதாணர விடயமல்ல. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் விவகாரத்திலும் இதுவே செல்வாக்கு செலுத்துகின்றன.
சிங்கப்பூர் நாட்டு பிரஜையை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமை எமது நாட்டு கல்விமான்களை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகவே கருத முடியும்.
மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கள் மோசடி திடீரென இடம்பெற்ற சம்பவம் அல்ல அரச அதிகாரத்துடன் இடம்பெற்ற மோசடியாகும் இதற்கு அப்போதைய ஆட்சியில் பிரதான பதவிகளில் இருந்த அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.
பினை முறி மோசடியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு கடந்த அரசாங்கம் எவ்விதமான உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
நாட்டுக்கு அவரை கொண்டு வருவதற்கான உரிய ஆவணங்கள் கடந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டுக்கு அவரை கொண்டு வருவதற்கான உரிய ஆவணங்கள் கடந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தற்போது சிங்கப்பூர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment