(எச்.எம்.எம்.பர்ஸான்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் நலன் கருதி குடிநீர் வசதியொன்றினை வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ.சலாம் என்பவரினால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஆசிரியர் கே.ஆர்.எம்.இர்ஷாத் அவர்களின் முயற்சியில் குறித்த குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்த நபருக்கு பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment