முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புங்கள் - பாராளுமன்ற உறுப்பினர்களைக் கோரினார் ரவிகரன் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புங்கள் - பாராளுமன்ற உறுப்பினர்களைக் கோரினார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கூடிய கவனஞ் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் 20.01.2010 இன்றையநாள் இடம்பெற்ற நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொணடு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

குறிப்பாக தற்போது நாட்டில் புதிய அரச தலைவர் பொறுப்பேற்ற பின்னர், முல்லைத்தீவு - உண்ணாப் பிலவு வைத்தியசாலையில் வைத்தியர் வெற்றிடம் நிலவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையான மாஞ்சோலை மருத்துவமனையில், 60 வைத்தியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், வெறுமனே 28 வைத்தியர்களே பணியாற்றுவதாக தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக பாரிய வைத்தியர் வெற்றிடம் நிலவுவதன் மூலமே அதிகளவான மரணச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் உரியவர்களுடன் பேசி மாவட்டத்தில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment