கொரோனா பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு - சீனா செல்ல வேண்டாம் என குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2020

கொரோனா பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு - சீனா செல்ல வேண்டாம் என குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்தது. தனது குடிமக்களை சீனா செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றானது டிசம்பர் மாதத்தில் சீன நகரமான வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து பல உலக நாடுகளிலும் பிராந்தியங்களிலும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.
சீனாவிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்றுவதற்காக உலக நாடுகள் இப்போது விமானங்களை அனுப்புகின்றதோடு மேலும் சீனாவிலிருந்து வரும் பயணிகள் மீது பயணத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

இதற்கிடையே அமெரிக்கா தனது குடிமக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இதுதொடர்பாக 4-ம் நிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கர்கள் சீனாவுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவில் இப்போது இருக்கும் எந்த நாட்டை சேர்ந்தவர்களும் வர்த்தக விமானத்தில் புறப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

No comments:

Post a Comment