பாராளுமன்ற உறுப்பினர் பௌசியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை தொடர்பான உரிமை மீறல் மனு மார்ச் 23 இல் - News View

About Us

About Us

Breaking

Monday, January 20, 2020

பாராளுமன்ற உறுப்பினர் பௌசியின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை தொடர்பான உரிமை மீறல் மனு மார்ச் 23 இல்

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் இன்று (20) இவ்வுத்தரவை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான விஜித் மலல்கொட, எஸ் துரைராஜா, காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இம்மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிரிசேன, செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒழுக்காற்று குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட 13 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

கடந்த வருடம் 51 நாள் ஆட்சி மாற்றத்தின் போது இவர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட்டிருந்தார். இது கட்சியின் முடிவுக்கு முரணானது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒழுக்காற்று விசாரணையில் முடிவெடுக்கப்பட்டு அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment