அரச அதிகாரி ஒருவர் பிழையான செயற்பாட்டில் ஈடுபடின் அவருக்கு எதிராக தண்டனை வழங்க நான் முன்நிற்பேன் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2019

அரச அதிகாரி ஒருவர் பிழையான செயற்பாட்டில் ஈடுபடின் அவருக்கு எதிராக தண்டனை வழங்க நான் முன்நிற்பேன்

அரச அதிகாரிகள் தமது கடமைகளை மனச்சாட்சியுடன் நிறைவேற்றுகின்ற செயற்பாடுகளுக்கு சட்டரீதியாக தடைகளை ஏற்படுத்த முடியாது. அது தொடர்பாக சட்ட மா அதிபருக்கு சட்ட மூலம் ஒன்றைத் தயாரிக்குமாறு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின்படி பிழையான முறையில் அரச அதிகாரி ஒருவரை குறித்தவொரு இடத்திற்கு அழைத்து விசாரணை செய்வோருக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென பிரதமர் யோசனையொன்றை அமைச்சரவைக்கு முன்வைத்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் இராஜாங்கஅமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், அரச அதிகாரி ஒருவர் பிழையான செயற்பாட்டில் ஈடுபடின் அவருக்கு எதிராக தண்டனைகள் வழங்குவதற்கும் நான் முன்நிற்பேன். நாட்டை அபிவிருத்தி செய்கின்றபோது அபிவிருத்திக்கு அவசியமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. அரசியல் ரீதியாக அன்றி மக்கள் நலன் கருதி இவ்வாறான தீர்மானங்களை நாம் மேற்கொள்ளவுள்ளோம். 

கடந்த காலங்களில் குற்றச்சாட்டுக்கள் இல்லாதவர்களுக்கு குற்றங்களை உருவாக்கி அவர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தால் அதன் மூலம் அவர்கள் மனவேதனைக்கு உள்ளாகி இருப்பின் அல்லது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பின் இது விடயமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு பரிசீலனை செய்து அவ்வாறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவுள்ளது. இதனால் தான் சிலர் நாட்டை விட்டு வெளியேற முற்படுகின்றனர். 

நாடு இன்று ஒருவழியாக முன்னேற்றங்கண்டு வருகிறது. ஏற்றுமதி பயிர்கள் எதனையும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவர முடியாது. கடந்த காலங்களில் தேயிலைதொழிற்சாலைகள் பல மூடப்பட்டிருந்தன. நாம் அதனை சரிசெய்து முன்னெடுத்துச் செல்ல உள்ளோம். இது அனைத்தும் நாட்டு மக்களுக்காகவே மேற்கொண்டு வருகிறது என்றார். 

வெலிகம நிருபர் 

No comments:

Post a Comment