மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 03 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணியிலிருந்து கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக மழை வீழ்ச்சியாக பதுளை, கந்தகெட்டிய பகுதியில் 57.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் அரை மீற்றருக்கு இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளன.

அத்தோடு மழை காரணமாக வடக்கு மாகாணத்தில் 2000 பேருக்கும் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று (04) பிற்பகல் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைதீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் சில பகுதிகளில் 150 மி.மீ அடை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment