கண்டி பிரதேசத்தில் இருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கிடைக்காமை பாரிய குறைபாடு என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அவ்வாறான அமைச்சு பதவி கிடைக்கப்பெறும் என தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேராதனையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் போது ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்வியொன்றுக்கு பதிலளித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், கண்டி பிரதேசத்துக்கு 5 இராஜாங்க அமைச்சு பதவிகள் கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வந்தோமோ அதுபோன்று நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பி, பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நாம் உரிய தீர்வை காண்போம்.
அடுத்த கட்ட நடவடிக்கையாகவே நாம் அதை மேற்கொள்ளவுள்ளோம். நாம் தேர்தலுக்காக போலி வார்த்தைகளை கூறவில்லை, தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனவும் கூறினார்.
எம்.ஏ. அமீனுல்லா
No comments:
Post a Comment