ஜனாதிபதி தேர்தலில் கூடடணியாக ஒன்றிணைந்து எவ்வாறு நாம் வெற்றி கொண்டோமோ அவ்வாறு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிகொள்வோம். இதற்கு எமது கூட்டு கட்சிகள் எந்தவித பாகுபாடுகளுமின்றி ஒத்துழைப்பு வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என போக்குவரத்து சேவை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று (3) சந்தித்து, ஆசி பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், எமக்கு எதிராக வாக்களித்தவர்கள் இன்று ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களில் தெளிவாக உள்ளனர். அவரது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அதிகமானோர் உள்ளனர். எதிர்காலத்திலும் பலர் ஒத்துழைப்பு வழங்குவர்.
அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டணியாக களமிறங்கி பலமிக்க அரசாங்கமொன்றினை அமைக்கவுள்ளோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூடடணியாக ஒன்றிணைந்து எவ்வாறு நாம் வெற்றி கொண்டோமோ அவ்வாறு சகல கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி கொள்வோம். மேலும் இதனை எமது கூட்டு கட்சிகள் எந்தவித பாகுபாடுகளுமின்றி ஒத்துழைப்பு வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எமக்கு சின்னத்தைப் பற்றி எந்தவித சிக்கலும் கிடையாது, கூட்டணியின் சின்னம் “மொட்டா” அல்லது “வேறா” என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுன ஸ்தாபகர்கள் மொட்டு சின்னத்தினிலே ஆதரவு வைத்துள்ளனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எம்.ஏ. அமீனுல்லா
No comments:
Post a Comment