அனர்த்த காலத்தில் 3ம் தவணை விடுமுறை கால மேலதிக வகுப்புக்களை நிறுத்துமாறு பெற்றோர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மார்கழி மாதத்தில் கிளிநொச்சியில் பெருமழை வெள்ளப் பெருக்கு அனர்த்தம் ஏற்படுகின்ற காலத்தில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு விடுமுறை கால மேலதிக வகுப்புக்கள் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் பெருமழை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய ஏது நிலைகள் அதிகம் காணப்படுகின்றன.
எனவே கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டாவது மார்கழி மாதத்தில் கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை கால மேலதிக வகுப்புக்கள் நடத்துவதைப் பிற்போட்டு முதலாம் தவணை விடுமுறை காலத்தில் இக்காலப் பகுதிக்குரிய விடுமுறை கால மேலதிக வகுப்புக்களையும் சேர்த்து நடத்துமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு குறூப் நிருபர்
No comments:
Post a Comment