மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) கொடகவெலவில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா சுகவீனம் காரணமாக தனது 57ஆவது வயதில் காலமானார்.
சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (04) காலை அவர் காலமானார்.
இவரது பூதவுடல் நேற்று (04) இரவு 9.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸாவின் பூதவுடல் கொடவெலவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (05) கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment