போதனாசிரியர்கள் சட்டத்தரணிகளாக பணியாற்ற முடியாது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

போதனாசிரியர்கள் சட்டத்தரணிகளாக பணியாற்ற முடியாது

பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் போதனைசார் பணியாள் தொகுதியினர் எவரும் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது என்றும், போதனைசார் பணியாளர்கள் தமது வழக்கமான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவ்வப் பல்கலைக்கழகங்களின் கல்வி நிறுவனங்களின் ஆளும் அதிகார சபை (பேரவை) அனுமதியுடன் நொத்தாரிசுகளாக பணியாற்ற முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்திருக்கிறது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் அவதானங்களுக்கு அமைவாக 21.11.2013 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 885ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, 05.09.2019 இல் நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இத் தீர்மானம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மெஹானட டி சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10/2019 ஆம் இலக்க தாபனச் சுற்றறிக்கையின் மூலம் சகல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அறிவித்திருக்கிறார்.

பருத்தித்துறை விசேட நிருபர்

No comments:

Post a Comment