ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸியை கட்சி உறுப்புரிமையிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கும் கடிதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீரவினால் ஒப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த முடிவுக்கு எதிராக ஏ.எச்.எம். பௌஸி நீதிமன்றத்தை நாடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் தனது சட்டத்தரணிகளுடன் விரிவாக ஆராய்ந்துள்ளதாகவும் அடுத்த சில தினங்களுக்கிடையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பௌஸி தெரிவித்தார்.
கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கமையவே பாராளுமன்ற உறுப்பினர் பௌஸியை விளக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
எம்.ஏ.எம். நிலாம்
No comments:
Post a Comment