இலங்கை வந்தார் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

இலங்கை வந்தார் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா சஹீட் (Abdulla Shahid) நேற்றிரவு (04) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவையும் சந்திக்கவுள்ளார்.

No comments:

Post a Comment