மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமை காரணமாக மலையகத்திற்கான புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
தியத்தலாவை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் நேற்றிரவு (04) மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் பண்டாரவளை மாத்திரமே புகையிரதப் போக்குவரத்து இடம்பெற்று வருவதாகவும் புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகளின் நன்மை கருதி தியத்தலாவைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் பஸ் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment