ஒன்பது மீனவர்கள் கடற்படையினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 4, 2019

ஒன்பது மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கற்பிட்டி, கிம்புல்வொக்க பகுதியில் 09 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று (03) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே, மேற்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிய அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இச்சந்தேகநபர்களிடமிருந்து 03 டிங்கி படகுகள், 85 கிலோகிராம் மீன், 165 கடலட்டைகள், 03 என்ஜின்கள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

25 வயது முதல் 42 வயது வரையான மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் கற்பிட்டி, முல்லைத்தீவு, புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்பிடித் திணைக்கள பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment