மன்னாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குளங்கள் அனைத்தும் நிறைந்து வான் பாய்வதனால் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட காணிகளுக்குள் வெள்ள நீர் நிறைந்துள்ளது.
இதனால் பல இலட்சம் பெறுமதியான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ச்சியாக நீர் வடிந்தோட முடியாத நிலையில் வயல் நிலங்களுக்குள்ளே தேங்கி காணப்படுவதால் அனைத்து முளைக்கும் நிலையில் உள்ள பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சொந்த தேவைக்கு கூட நெல் பெற்றுகொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் பல இலட்சம் செலவு செய்த நிலையில் தாங்கள் தற்போது அனைத்தையும் இழந்த நிலையில் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரண உதவிகளையாவது வழங்குமாறு பாதிக்கப்பட விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மன்னார் குறூப் நிருபர்
No comments:
Post a Comment