சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கண்டி வலப்பனை பிரதான வீதியை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு, இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடும் மழை காரணமாக பலாங்கொடை, இம்புல்பே, கல்லேனகந்த, தம்பகான் ஓயா என்ற நதிகளுக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் பாரிய கற்பாறையுடன் மண்மேடும் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் இந்த வீதியில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இம்புல்பே பிரதேச செயலாளர் டி.எம்.பி.எஸ்.வட்டுகெதர தகவல் தருகையில், வீதியை செப்பனிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நுவரெலியா, வலப்பனை, மலப்பத்தாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஸ்பகுமார் ஆகியோர் சென்று நிலமையைே கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment