மணல் மற்றும் கனிய வளங்களை சட்ட விரோதமாக அகழ்தல் தொடர்பான கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கு தடை விதிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

மணல் மற்றும் கனிய வளங்களை சட்ட விரோதமாக அகழ்தல் தொடர்பான கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கு தடை விதிப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் மற்றும் கனிய வளங்களை சட்டவிரோதமாக அகழ்வு செய்தல், ஏற்றிச் செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (31) நடைபெற்றது.

இதன்போது பிரதேச செயலாளர்கள், பொலிஸ், விசேட அதிரடிப் படையினர், திணைக்களத் தலைவர்கள் ஆகியோருடன் மணல் அகழ்வது தொடர்பான பிரச்சpனைகள் கேட்டறிந்து அதற்கான கருத்துரைகள் வழங்கப்பட்டது.

அரசாங்கம் அதிபர் மாணிக்கம் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில் மணல் மற்றும் கனிய வளங்களை சட்டவிரோதமாக அகழ்வது தண்டனைக்குறிய குற்றமாகும் இதனை பிரதேச செயலாளர்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

மேலும் இந்த சட்டவிரோதமாக மணல் ஏற்றி செல்லும் போக்கு வரத்து பாதையானது சேதமடைந்து காணப்படுவதனால் பொதுமக்கள் போக்குவரத்து செய்வது கடினமாகக் காணப்படுகிறது. விசேடமாக சட்ட விரோதமாக மண் அகழ்பவர்களுக்கு எதிராக உரிய நடவக்கை எடுக்குமாறு பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரிடம் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான பாரதூரமான விடயம் என்னவென்றால் சட்ட விரோதமாக மணல் அகழ்வதேயாகும். 

தற்போது இதன் தாக்கமானது அதிகரித்து காணப்படுவதனால் உடனடியாக மண் அகழ்வதை தடுக்க வேண்டும் இல்லையேனின் எமது வளத்தினை நாம் அழிப்பது போல் ஆகிவிடும் என்று கருத்து தெரிவித்தார்.

இதன்போது 2020 பெப்ரவரி 01 வரை மண் அகழ்வதை நிறுத்தி வைக்குமாறு இக்கூட்டத்தில் எகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்fshd சி.யோகேஸ்வரன், அலிசாஹிர் மௌலானா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த், விவவாய திணைக்கள உத்தியோகத்தாகள், கமநல சேவைகள் திணைக்க உத்தியோகத்தர்கள், நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள், புவி சரிதவியல் அளவை சுரங்கப்பணியக பொறியியலாளர் எம்.ஆர்.எம் பாரிஸ், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment