குடிநீரின் தரத்தை மேம்படுத்த அடிப்படைத் திட்டம் உருவாக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2019

குடிநீரின் தரத்தை மேம்படுத்த அடிப்படைத் திட்டம் உருவாக்கம்

குடிநீரின் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைத் திட்டமொன்றை உருவாக்குமாறும் கஷ்டப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு தூய குடி நீரைப் பெற்றுக் கொடுக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணக்கார தெரிவித்துள்ளார்.

நீர்வழங்கல் அமைச்சின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் அமைச்சில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பாரிய நீர் வழங்கல் திட்டங்களுக்கான முதலீட்டு உதவிகள் மிகக் குறைந்த வட்டி மூலம் பெற்றுக்கொள்வதன் மூலம் உற்பத்தி செலவைக் குறைத்து, நீர் கட்டணத்தை மக்களுக்கு ஒரு சுமையாக மாற்றாமலிருக்க வழியேற்படும். 

மேலும் அடையாளம் காணப்படாத சிறுநீரக நோய் அதிகமாகக் காணப்படும் பிரதேசங்களின் குடிநீர்ப் பிரச்சினைகள் தொடர்பாகக் கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும்.

ஒரு நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் அதற்கான முதலீட்டுக்கு ஏற்ற வகையில் பயன்பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். 

மேலும் சமூக நீர் வழங்கலின் போது குழாய்க் கட்டமைப்பு அமைப்பதற்குக் கூடிய காலம் எடுப்பதால் முதலில் நீர் சேகரிக்கும் தாங்கிகளை அமைத்து மக்களுக்கு விரைவாகப் பயன்படுத்துவதற்கு வசதி செய்துகொடுக்கலாம். இந்நிலை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளை வேண்டிக் கொண்டார்.

No comments:

Post a Comment