ஐக்கியம் சமத்துவம் ஒன்றிணைவு என வார்த்தைகள் மூலமாக அழைப்புகளும் எதிர்வுகூறல்களும் முன்வைக்கப்பட்டாலும் அனுகுமுறைகளிலும் செயல்வடிவங்களிலும் அவற்றை பிரதிபலிக்கூடிய - நம்பிக்கைதரக்கூடிய அம்சங்களை சமகால அரசியலில் காணமுடியவில்லை. எனவே முஸ்லிம் மக்கள் மிக நிதானமாக இக்கால கட்டத்தை கடைக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். எமது ஒற்றுமையை திடகாத்திரமாகக் கட்டியெழுப்புவதன் ஊடாக இதனை நாம் வெற்றி கொள்ள முடியும்.
இவ்வாறு தெரிவிக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழுக்கு மாகாண முன்னாள் முதல்வருமான நஸிர் அஹமட்.
இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐக்கியம் சமத்துவம் ஒன்றிணைவு குறித்து அவ்வப்போது அழைப்புகள் விடுக்கப்படுவதுடன் கருத்துகளும் முன்வைக்க ப்படுகின்றன. எனினும் இந்த அம்சங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துகூடிய நடை முறைகள் இல்லாது இருக்கின்றமை கவலையை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள காபந்து அரசில் முஸ்லிம் ஒருவர்கூட அமைச்சராகவோ இராஜாங்க அமைச்சராகவோ பிரதி அமைச்சராகவோ நியமனம் பெறாத நிலைமை உள்ளதைப் பார்க்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படுவதை நாம் அனுமதிக்க முடியாது.
எனவே எமது சமூக ஒன்றுமையுடன் இந்த நிலைமையை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே எடுத்தாக வேண்டும். எமது அபிலாஷைகளை தேவைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமாயின் எமது அரசியல் சக்தியை நாம் பலப்படுத்தி திடப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
இதேநேரம் எமது சமூகத்துக்கான அரசியல் குரலை நசுக்கி அதனை சிதைக்கும் நோக்கில் பிரித்தாளும் தந்திரங்கள் முன்னெடுக்கப்படுவதற்கும் நாம் இடமளித்து விடக்கூடாது. இதற்கான வழிநடத்தல்களை பிரித்தாளும் எண்ணம் கொண்டோர் செய்ய முடியாத வண்ணம் எமது மக்கள் சக்தியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக ஜனநாயக முறைமையில் எமது ஒண்றிணைந்த சக்தியை நாம் பறைசாற்ற செய்ய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் மக்கள் தமது அரசியல் குரலை ஜனநாயக வழியில் ஸ்தீரப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சந்தர்ப்பம் விரைவில் வரவிருக்கின்றது. அதனை நாம் கட்சிதமாக பயன்படுத்திக்கொள்ள இப்போதே தயாராக வேண்டியது அவசியமானது என்றுள்ளது.
No comments:
Post a Comment