மிளகு, பாக்கு, புளி உள்ளிட்ட சிறு ஏற்றுமதிப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளதாக நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் வௌியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் கறுவா, சாதிக்காய், கராம்பு, இஞ்சி மற்றும் ஏலக்காய் போன்ற சிறு ஏற்றுமதி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீள் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி நோக்கத்திற்காக மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதனை தடை செய்யும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (05) இரவு முதல் அமுலாகும் வகையில் வௌியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சிறு ஏற்றுமதி பயிர் விவசாயிகள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, வெசாக் கூடுகள், பட்டம், சாம்பிராணி போன்றவற்றை இறக்குமதி செய்தவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கழிவுகளை பதப்படுத்தல் மற்றும் மீள் சுழற்சி திட்டம் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனூடாக உயர்தரம் மிக்க உள்நாட்டு பொருட்கள் காணப்படுகின்ற நிலையில், தரம் குறைந்த இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதனை தடுக்க முடியுமென நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment