தற்போது பெய்து வருகின்ற கன மழை காரணமாக கிளிநொச்சியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்கள் சில பகுதிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கு பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலையினை சுற்றி வெள்ளம் காணப்படுவதனாலும் இராணுவனத்தினரால் படகு மூலம் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டனர்.
(கிளிநொச்சி நிருபர் முருகையா தமிழ்செல்வன்)
No comments:
Post a Comment