கொழும்பு துறைமுக ஏற்றுமதி செயற்பாட்டு முனையத்தில், ஏற்றுமதி செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 35,000 கிலோ கழிவுத் தேயிலை மீட்கப்பட்டுள்ளது.
தும்பு மீதிகள் என தெரிவிக்கப்பட்டு, 40 அடி நீளம் கொண்ட இரு கொள்கலன்களில் தயார்படுத்தப்பட்டிருந்த குறித்த கழிவுத் தேயிலை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவை, CSCL Sydney எனும் கப்பல் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின், ஜெபல் அலி துறைமுகத்தினூடாக ஈராக்கிற்கு கொண்டு செல்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி ரூபா 3.5 மில்லியன் (ரூபா 35 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கண்டி பிரதேசத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனம் ஒன்றினால் குறித்த சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சுங்கத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment