சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த இரு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (03) அதிகாலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து மஸ்கட் வழியாக இலங்கை வந்த WY0381 எனும் விமானத்தில் வந்த இருவரே இவ்வாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
123 கார்ட்டன்கள் மற்றும் 670 பைக்கற் சிகரெட்டுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இதன் பெறுமதி ரூபா 22 இலட்சத்து 80 ஆயிரம் (ரூபா 2,280,000) பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்கள், கொழும்பு மற்றும் அங்கொட பிரதேசங்களைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment