குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று (03) வெல்லம்பிட்டி பகுதியில் 21 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது.
இப்பகுதியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர்சோதனையில் 19 இந்தியர்களும் 2 பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்லுபடியாகும் விசா ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருந்தமையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் தங்கியிருந்த காலத்தில் தொழில்வாய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், தற்போது மிரிஹானா தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment