நாங்கள் இம்மண்ணில் ஜனநாயக வாதிகள். எங்களுடைய சமூகமும் ஜனநாயகவாதிகள். இவ்வாறே நாம் ஆயிரம் வருடங்களாக பயணித்து உள்ளோமென கிண்ணியாவில் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.
வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (01) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அப்துல்லா மஃறூப் எம்.பி மற்றும் கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் பின்னால் சில இனவாத பாராளுமன்ற உறுப்பினர்களும் சில ஊடகங்களும் தன்னை கைது செய்வதற்கு ஏதுவான சகல விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்கள் சஹ்ரான் என்ற ஒருவனை வைத்து அவனோடு எம்மை தொடர்புபடுத்தி சிங்கள சமுதாயத்தில் எம்மை மோசமாக காட்டியவர்கள்.
கடந்த இரண்டு வார காலமாக என்மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிங்கள ஊடகம் தொழில்பட்டு வருகின்றது. குற்றச்சாட்டுக்கள் இருந்தால் பொலிஸில் முறையிட்டு அதனை நீதிமன்றம் ஊடாக செயல்படுத்துங்கள்.
என்னை கடந்த சில தினங்களுக்கு முன்பு புத்தளத்தில் வைத்து எனது வாகனத்தை உடைத்து என்னையும் அச்சுறுத்தினர். அநியாயம் செய்யாத ஒருவரை சிங்கள மக்கள் மத்தியில் அநியாயம் செய்த ஒருவராக காட்டி நீதிமன்றம் வழங்கவேண்டிய தீர்ப்பினை ஊடகமொன்று வழங்க முனைகின்றது.
நாம் கடந்த காலங்களில் அமைச்சுப் பதவியை வைத்திருந்தாலும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருந்து வந்துள்ளோம்.
கடந்த காலங்களில் எமது சமுதாயத்திற்காக அமைச்சுப் பதவிகளில் இணைந்து ஒரு உதாரண புருஷராக நாங்கள் திகழ்ந்தவர்கள்.
பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் ஜனநாயகவாதிகள் இனவாதிகளால் காட்ட முனைந்தால் நாங்களும் ஜனநாயகப் போராட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிவரும் என்றார்.
திருமலை மாவட்ட விசேட நிருபர்
No comments:
Post a Comment