நுகர்வோர் சட்டத்தை மீறி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 1900 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 237 வர்த்தக நிலையங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் ஒரு குறிப்பிட்ட நிர்ணய எடை இல்லாமல் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சுற்றிவளைப்புகள் 15 ஆம் திகதி வரை நடைமுறைபப்படுத்தப்படவுள்ளன.
No comments:
Post a Comment