இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று தனது ட்விட்டர் தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனா, இந்தியா உள்ளிட்ட உலகின் பலம் வாய்ந்த நாடுகள், இலங்கை மீது நம்பிக்கை வைத்து, எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இறைமையுள்ள நாடு என்ற வகையில், இலங்கையின் தனித்துவத்தை மதித்து முதலீட்டுத் திட்டங்களுடன் இணையுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment