(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை பகுதிகளிலுள்ள ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்து ஆற்றில் அதிக நீரோட்டம் காணப்படுவதினால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பதுரியாநகர் - மாஞ்சோலை மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஈஸா லெவ்வை றியாஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த பகுதிகளில் சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணாமாக மீனவர்கள் ஆற்றில் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கஷ்ட நிலையைக் கருத்திற்கொண்டு மீன்பிடிக்க செல்லும் சில மீனவர்கள் மீன்கள் இன்றி ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் ஆற்றுநீர் அதிகரித்ததன் காரணத்தால் நீரில் மூழ்கியுள்ளதாகவும், மீன்பிடி வலைகள் சேதமடைந்து காணப்படுவதாகவும் மீனவர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment