விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 பெப்ரவரி 6 ஆம் திகதி கொழும்பு - 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஹெவ்லோக் வீதியை மறித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கருவாத்தோட்டம் பொலிஸார் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர்.

No comments:

Post a Comment