அரசியல் கட்சி தலைவர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

அரசியல் கட்சி தலைவர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டுப்பணம் தொடர்பான திருத்தங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளல் இந்த சந்திப்பின் பிரதான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment